கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், ஆவடி காவல் சரகத்திற்கு உட்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு, வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள பிட் ஹாட் தொப்பி மற்றும் கண்ணாடி வழங்கப்பட்டது. இடம் : பாடி, சென்னை.
நெரிசல்:காந்தி ஜெயந்தி தொடர்ந்து விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பவும் பொதுமக்களால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல். இடம் :பெருங்களத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ் புதிய சமுதாய குளம் அமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.