சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, இன்று முதல் சாப்பாடு இல்லை என்று போர்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வாடிக்கையாளர்கள் குறைவாகவே காணப்பட்டனர். இடம் : ராஜ் பவன் ஹோட்டல், அமைந்தகரை.
பாமக மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் சௌமியா கலந்து கொண்டனர்
அமெரிக்கா ஈரான் போர் காரணமாக சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் சென்னை மணலி அருகே எல்.பி.ஜி சமையல் கேஸ் நிரப்புவதற்காக நூற்றுக்கு மேற்பட்ட லாரிகள் காலி சிலிண்டர்களுடன் காத்து நிற்கின்றன.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் போலீஸ் துறை சார்பில் நடந்த விழாவில் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு கவர்னர் கைலாஷ் நாதன் முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினர்.