உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் வெயில் சதமடிக்கத் துவங்கிவிட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண வந்த சுற்றுலாப் பயணி ஒருவர், அதன் அழகை ரசிப்பதை விட, தகிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு அசாம் மாநிலத்தில் இருந்து பிஜிலி என்ற 5 வயது பெண் யானை வந்தது. மடத்தில் உள்ள மையத்தில் யானை பராமரிக்கப்படும் என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனந்த் சதுர்தசி தினத்தில் விநாயகர் விசர்ஜனம் எனப்படும் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்தது. அதில் வண்ணப்பொடிகள் தூவி கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை தூய்மை பாரத இயக்கம்-நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ் கம்பன் கலை யரங்க வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான கோலப்போட்டி நடந்தது.
விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கங்களின் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.
ஆசிய விளையாட்டு கலப்பு அணிகளுக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது; மூவர்ணக்கொடியுடன் வெற்றியை கொண்டாடிய வீரர்-வீராங்கனையர். இடமிருந்து: மானு, பூவம்மா, விஷால், வித்யா. இடம்: நகோயா நகரம், ஜப்பான்.