சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை சிங்காரத் தோட்டத்தில் உள்ள சின்ன சேனியம்மன் கோவிலில், பங்குனி திருவிழாவில் முக்கிய நிகழ்வான தீச்சட்டி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜையில் முன்னிட்டு உலகத் திருவள்ளுவர் சங்கத்தினர் திருவள்ளுவர் சிலையிலிருந்து மக்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றது.
கோவை ராம்நகர் விவேகானந்தர் சாலையிலுள்ள டாக்டர் ராஜரத்தினம் மருத்துவமனையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரத்ததான மையத்தை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பார்வையிட்டார்.