சட்டசபை தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் திருப்பூர், சிறுபூலுவபட்டி அம்மன் மண்டபத்தில் நடந்தது. இதில்,தேர்தல் பொறுப்பாளர் வேலுமணி பேசினார். அருகில் வடக்கு தொகுதி வேட்பாளர் ஆனந்தன்.
நீலகிரி மாவட்டத்தில் மழை, வெயில் என மாறி வரும் காலநிலை மாற்றத்தால் பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் மலை தொடர்களை தழுவி வரும் மேகம் பயணிகளை பரவசப்படுத்துகிறது.
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஐராவதம் என்ற வெள்ளை யானை வடிவில் சிவபெருமான் காட்சியளித்தார். இந்நிகழ்வை நினைவு கூரும் வகையில் திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு, திருநீறு பூசப்பட்டதை அடுத்து வெள்ளை யானையாக உலா வந்தது.
ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மலைப் பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகளும், மண்ணும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் குவிந்துள்ளன. மழை நீர் வடிந்த பின் சாலைகளில் கற்களும், சேறும் சகதியும் சூழ்ந்துள்ளதால் மக்கள் தட்டுத் தடுமாறி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனா வணிக ரீதியிலான கிராவிட்டி-1 ராக்கெட் மூலம் 9 செயற்கைக்கோள்களை ஷாங்காய் கடலோரப் பகுதியில் உள்ள கப்பல் தளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. நிலையான நிலப்பரப்பு ஏவுதளங்கள் தேவை இன்றி கப்பல் தளம் மூலம் ராக்கெட்டுகளை ஏவும் திறனை சீனா பெற்றுள்ளது.