மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.
சென்னை நுங்கம்பாக்கம் முதல் லேன் தெருவில் சாலையில் இருபுறங்களும் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி வேட்புமனு பரிசீலணையின் போது தவெகவினர் நுழைவாயிலில் அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இடம்: தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம்.