திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சர் வேலுவின் பிரசாரத்தின் போது ஆரத்தி தட்டுகளில் பணம் போடாததால் பெண்கள் சற்று ஏமாற்றத்துடன் நின்றனர். உடனே அவர்களிடம் தேர்தல் ஆணையமும், பத்திரிக்கையாளர்களும் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது முடியாதுங்கம்மா… கொஞ்சம் புரிஞ்சுக்கங்க! என்று கட்சிக்காரர்கள் சொன்னதும் சிரித்துக்கொண்டே கலைந்து சென்றனர்.
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு நமாமி பாரதம் எனப்படும் பாரதமே உன்னை வணங்குகிறேன் என்ற தலைப்பில் நாடு தழுவிய குழு பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பள்ளியொன்றில் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பயிற்சியில் ஆர்வத்துடனும், தேசபக்தியுடனும் பங்கேற்றனர்.
சென்னை மாநகராட்சி மற்றும் வைஷ்ணவா கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பாதிப்பை ஏற்படுத்தும் கொசுக்களை பார்வையிட்ட மாணவியர். இடம்: அரும்பாக்கம், சென்னை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆவணி மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.