மடத்துக்குளம் தொகுதி அ.ம.மு.க.வேட்பாளர் சண்முகவேலுவை ஆதரித்து எரிசனம்பட்டி நாலு ரோட்டில் பிரசாரம் செய்ய வரும் பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலையை வரவேற்க ரோஜா பூ மாலையுடன் காத்திருக்கும் தொண்டர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ் புதிய சமுதாய குளம் அமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.