விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு விழுப்புரம் சரக டி .ஐ .ஜி., அருளரசன் ஆலோசனைகள் வழங்கினார். அருகில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன்
கோவை தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவகவும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மற்றும் பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மனு அளித்தனர்.
கோவை தெற்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மற்றும் பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தர்ணாவில் ஈடுபட்டனர்.
நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டை சுத்தம் செய்வது காய்கறிகளை நறுக்குவது, மலர்களை ஒழுங்குபடுத்துவது போன்ற வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் ரிச்பர்க் பகுதியில் உள்ள மையத்தில் காட்டுத்தீ குறித்து ஒரு முக்கிய ஆய்வு நடைபெற்றது. காட்டுத்தீ ஏற்படும் போது குடியிருப்புகளை தீ விபத்துக்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தரவுகளை சேகரிக்க இந்த சோனை நடத்தப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்க உள்ளது. இதையொட்டி ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் அலுவலர்களுக்கு தேவைப்படும் பொருட்களை பிரித்து அனுப்பும் பணி நேற்று நடந்தது. இடம்: பாலிடெக்னிக் கல்லூரி, ஆர்.கே.நகர், சென்னை.