கடந்த 1945ல் இரண்டாம் உலக போரின் போது, சோவியத் யூனியன் ஜெர்மனியின் நாஜி படைகளை எதிர்த்து வெற்றி பெற்றது. இது வெற்றி திருவிழாவாக ரஷ்யாவில் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சோவியத் யூனியன் கால சீருடைகளை அணிந்து வெற்றி வால்ட்ஸ் நடன பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள். இடம்: மாஸ்கோ.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இரு நாட்கள் நடக்கும் விமான கண்காட்சியின் முதல் நாளில் நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வேஸ்ட் டு வொண்டர் ப்ளவர் கார்டன் என்ற சூழலியல் பூங்காவிற்கு வருகை தந்த பள்ளி மாணவர் ஒருவர் பூந்தொட்டியாக மாற்றப்பட்டுள்ள பழங்கால காரின் அழகை ரசித்தார்.