தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் நடைபாதை செல்லும் பயணிகள் மிகவும் சிரமத்துடன் செல்கின்றனர.
13-May-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ22-Sep-2026

2/

அந்தி வானம் அள்ளித் தெளித்த வண்ணங்களால் மாலை பொழுதே ஓவியமாய் காட்சியளிக்கிறது. இடம்: காந்திபார்க், முத்தண்ணன் குளம்.
22-Sep-2026

3/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
22-Sep-2026

4/

கோவையில் மாலை பொழுதில் பெய்து வரும் மழையால் குளிர்ந்த பூமியில் பூத்துக் குலுங்கும் புதுமலரில் தேனை ருசிக்கும் ஹம்மிங் மாத் பூச்சி. இடம்: வெள்ளலூர் குளக்கரை.
22-Sep-2026

5/

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழையில் நனைந்தபடி சென்ற வாகன ஓட்டிகள். இடம்: தாம்பரம்.
22-Sep-2026

6/

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு நமாமி பாரதம் எனப்படும் பாரதமே உன்னை வணங்குகிறேன் என்ற தலைப்பில் நாடு தழுவிய குழு பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பள்ளியொன்றில் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பயிற்சியில் ஆர்வத்துடனும், தேசபக்தியுடனும் பங்கேற்றனர்.
22-Sep-2026

7/

சென்னை மாநகராட்சி மற்றும் வைஷ்ணவா கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பாதிப்பை ஏற்படுத்தும் கொசுக்களை பார்வையிட்ட மாணவியர். இடம்: அரும்பாக்கம், சென்னை.
22-Sep-2026

இன்றைய போட்டோ21-Sep-2026

8/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆவணி மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
21-Sep-2026

9/

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்கள், தங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை அங்குள்ள ஜீலம் ஆற்றில் கரைத்தனர்.
21-Sep-2026

இன்றைய போட்டோ20-Sep-2026

10/

பச்சைக் கம்பளம் விரித்தது போல்...சில்லென்று காற்று மலைகளை தழுவி செல்ல, வானில் கார்மேகங்கள் சூழ, மலையை எதிர்பார்த்து காத்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இடம்: குன்னூர் சோகத்தொரை.
20-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us