நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான 21வது ரோஜா கண்காட்சி ஊட்டி ரோஜா பூங்காவில் துவங்கியது; நடப்பாண்டு பறவைகளின் சொர்க்கம் என்ற கருப்பொருளை கொண்டு 2 லட்சம் ரோஜா மலர்களால் பல்வேறு பறவை இனங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 70,000 ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட அன்னப்பறவை ஜோடி.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ரிஷிகேஷ்- பானியாவாலா தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் திட்டத்திற்காக அங்குள்ள மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து மரங்களைக் கட்டியணைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்.
லலித் கலா அகாடமியில் பனை வேர்களின் கதைகள் எனும் தலைப்பில் மாணவர்கள் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி நடந்து வருகிறது. இதை பார்வையிட்ட மாணவ- மாணவியர். இடம்: கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை.
ஒடிஷாவின் புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று நடக்கிறது. இதையொட்டி ஜெகந்நாதர் கோவிலின் முன் தேர்களை திருப்பி நிலைநிறுத்தும் தக்ஷிண மோடா எனும் பாரம்பரிய நிகழ்வு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.