திருநெல்வேலி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 10,625 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
புதுச்சேரி மிஷன் வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக நடந்தது.. இதில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை ஜேசிபி மூலம் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
தமிழகத்தில் மீன் பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டதால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
நாள் முழுவதும் அலைந்து திரிந்த சிறகுகள், இப்போது மாலையின் பொன்னொளி போர்த்திய ஆதவனின் அரவணைப்பில் சிறகுகளை தளர்த்தி ஓய்வு எடுக்கின்றன இந்த புள்ளினங்கள். இடம்: குமாரசாமி குளம், தடாகம் சாலை, கோவை.
மழை நீர் வடிகால் பணிகள் பல மாதங்களாக மந்தகதியில் நடப்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.இடம் : யானை கவுனி மேம்பாலம் சந்திப்பு.