தவெக இணைப்பு விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர். இடம்: மாமல்லபுரம்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப் கார் சேவையின் வருடாந்திர பராமரிப்பு பணி 64 நாட்கள் முடிந்து மீண்டும் துவங்கியது.
மேற்குவங்கம் கொல்கட்டாவில் துர்கா பூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி அங்குள்ள பந்தல் ஒன்றில் சிவபெருமானையும், பார்வதியையும் குறிக்கும் கங்கவுர் எனப்படும் ராஜஸ்தானிய பாரம்பரிய திருவிழாவை சித்தரிக்கும் ஓவியங்கள் வரைந்த கலைஞர்.
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏவான துணை சபாநாயகர் ரவிசங்கர் தனது வீட்டிற்கு வராதீங்க, அலுவலகத்திற்கு வருமாறு தனது வீட்டின் முன் பேனர் வைத்துள்ளார்.
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு நமாமி பாரதம் எனப்படும் பாரதமே உன்னை வணங்குகிறேன் என்ற தலைப்பில் நாடு தழுவிய குழு பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள பள்ளியொன்றில் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பயிற்சியில் ஆர்வத்துடனும், தேசபக்தியுடனும் பங்கேற்றனர்.