தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மஹாராஷ்டிராவின் மும்பை மாநகரை அழகுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக நகரின் பாரம்பரிய தெருக்கள் கலை சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. காலா கோடா ஆர்ட் அவென்யூ என பெயரிடப்பட்டுள்ள இந்த கலை சாலைகள் திறக்கப்பட்டன. அந்த சாலை வழியே நடந்த பெண் ஒருவரை வரவேற்ற கண்ணாடி சிலை மனிதன்.
15-Jul-2026

ShareTweetShareShare

2/

சென்னை காசிமேடு கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கி காணப்பட்டதால் தரை தட்டி நிற்கும் பைபர் படகுகள்.
15-Jul-2026

3/

ஊட்டியிலுள்ள , தனியார் நஹார் பைனான்சை கோர்ட் உத்தரவு படி ஜப்தி செய்ய வந்த வக்கில்கள் மற்றும் கோர்ட் ஊழியர்கள்.
15-Jul-2026

4/

ஐரோப்பிய நாடான பிரான்சின் தேசிய தினம் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் அருகே கொண்டாடப்பட்டது. அப்போது பட்டாசு வெடித்தும், ட்ரோன் எனப்படும் ஆள் இல்லா சிறிய விமானங்களை ஒளிரச்செய்தும் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
15-Jul-2026

5/

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் வன விலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி ஆபத்தை உணராமல் கரடிக்கு மிக அருகில் வாகனங்களை நிறுத்தி அத்துமீறலில் ஈடுபட்ட சுற்றுலா பயணியர்.
15-Jul-2026

6/

சென்னை தண்டையார்பேட்டை ரயில் பணிமனையில் எண்ணெய் ஏற்றி செல்லும் டேங்கர் ரயிலில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வசதியாக 800 மீட்டர் தூரத்திற்கு ஸ்டீல் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
15-Jul-2026

7/

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலம் வாயிலாக 3 பேர் விண்வெளிக்கு புறப்பட்டனர். இதில் அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான அனில் மேனனும் ஒருவர்.
15-Jul-2026

8/

பிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பிரெஞ்சு தூதரகம் முன்பு இரவு வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
15-Jul-2026

இன்றைய போட்டோ13-Jul-2026

9/

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பத்மஜா பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
13-Jul-2026

10/

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைக்க கேட்பு கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
13-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us