திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவம் ஒன்பதாம் நாள், கோவில் மூன்றாம் பிரகாரம் மகிழ மரம் அருகே சிவகாமி சமேத நடராஜர் பெருமானுக்கு திருஉடல் உற்சவத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 4வது தொழில் கண்காட்சி திருமுடிவாக்கத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. தென்னரசு துவக்கி வைத்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு எருகம்பெனி - ரத்தினபுரி வரை சங்கனூர் கால்வாயின் இருபுறமும் மாநகராட்சி சார்பில் தடுப்புசுவர் எழுப்பி வாகன ஓட்டிகள் செல்ல புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.
வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்களுக்கு பேட்டரி கார் சேவையை துவக்கி வைத்த நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த். உடன் இடமிருந்து பேட்டரி கார் உபயம் வழங்கிய ஷட்டில்கார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் சங்கர்.இடம் : வடபழனி
ரேடிசன் ஹோட்டல் அரங்கில் யுனைடெட் எக்கனாமிக் சப்மிட் 2026 மாநாடு நடந்தது இதில் இந்தியாவிற்கான உகாண்டா நாட்டின் உயர் ஆணையர் ஜாய்ஸ் கிகாஃபுண்டா பேசினார் .
முதல்வர் தனிப்பிரிவில் ஆய்வு செய்ய முதல்வர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என தகவல் வெளியாகிய நிலையில் மக்களுக்கு நிழல் கூடம் மற்றும் புதிய பேட்டரி வாகனம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.