முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் ஆதரவாளர்கள் 1000 தீர்க்கும் மேற்பட்டோர் தாங்கள் அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதங்களை சென்னையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் வைத்து கோஷம் எழுப்பினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப் கார் சேவையின் வருடாந்திர பராமரிப்பு பணி 64 நாட்கள் முடிந்து மீண்டும் துவங்கியது.
மேற்குவங்கம் கொல்கட்டாவில் துர்கா பூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி அங்குள்ள பந்தல் ஒன்றில் சிவபெருமானையும், பார்வதியையும் குறிக்கும் கங்கவுர் எனப்படும் ராஜஸ்தானிய பாரம்பரிய திருவிழாவை சித்தரிக்கும் ஓவியங்கள் வரைந்த கலைஞர்.
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏவான துணை சபாநாயகர் ரவிசங்கர் தனது வீட்டிற்கு வராதீங்க, அலுவலகத்திற்கு வருமாறு தனது வீட்டின் முன் பேனர் வைத்துள்ளார்.