நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அனைந்திந்திய மாணவர் சங்கம் சார்பில் பீஹாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது மாணவர்கள்- போலீசார் இடையே வெடித்த மோதல் கலவரமாக மாறியது. பாட்னாவில் நடந்த வன்முறையில் போலீஸ் வாகனத்தை கவிழ்த்த போராட்டக்காரர்கள்.
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைதான மகேந்திர சிம்ஹன் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க , சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போக்சோ நீதிமன்றம் அழைத்து வந்தனர். இடம்: சென்னை உயர் நீதிமன்றம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தனம் அபிஷேகம் நடந்தது.
முழு வீச்சு!மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் மணப்பாக்கம் அருகே மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : மணப்பாக்கம்
குளிர்பான விளம்பர பலகை முன் ஹாயாக அமர்ந்து விளம்பர மாடல் மங்கைக்கே டப் கொடுத்த மங்கியாரின் சேட்டை... அந்த நொடியில் நம் புகைப்பட கலைஞரின் கேமராவுக்கு நல்ல வேட்டை!. இடம்: உடுமலை, திருப்பூர்.