நீட் எனப்படும் இளநிலை மருத்துவப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்தது. பிறகு தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதை கொண்டாடி மகிழ்ந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர். இடம்: மும்பை, மஹாராஷ்டிரா.
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைதான மகேந்திர சிம்ஹன் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க , சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போக்சோ நீதிமன்றம் அழைத்து வந்தனர். இடம்: சென்னை உயர் நீதிமன்றம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தனம் அபிஷேகம் நடந்தது.
முழு வீச்சு!மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் மணப்பாக்கம் அருகே மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : மணப்பாக்கம்
குளிர்பான விளம்பர பலகை முன் ஹாயாக அமர்ந்து விளம்பர மாடல் மங்கைக்கே டப் கொடுத்த மங்கியாரின் சேட்டை... அந்த நொடியில் நம் புகைப்பட கலைஞரின் கேமராவுக்கு நல்ல வேட்டை!. இடம்: உடுமலை, திருப்பூர்.