தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நேற்று மாலை நடந்த ஆடித்தபசு விழாவில், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக சுவாமி காட்சி அளித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர்.
தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு வழங்குவதற்காக புதிய இருசக்கர வாகனம் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை லூப்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் சமரசம் பேச வந்த அமைச்சர் வெங்கட்ராமனை மீனவர்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி திருப்பி அனுப்பினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழநி தண்டபாணி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி பத்திரப்பதிவுக்குள்ளான நிலத்தின் அசல் வாரிசுதாரர்கள் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு பத்திரத்துடன் வந்தனர்.