மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ வழித்தடத்தில் நந்தம்பாக்கம் பகுதியில் மேம்பாலத்தில் ரயில்பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதுஇடம் : நந்தம்பாக்கம்
நடைபாதையை மறைத்து தகர அட்டை விழுந்து இருப்பதால் நடந்து செல்வோருக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இடம்: லங்கா கார்னர், அரசு மருத்துவமனை அருகில்
ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நாக சிலைக்கு பால் ஊற்றி, பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
எத்தனை வெயிலையும் தாங்கும் கற்பகதரு பனை மரங்கள் இந்த ஆண்டு வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் காய்ந்து வருகின்றன.. இடம்: திருநெல்வேலி மாவட்டம், இராமகிருஷ்ணாபுரம்..
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் பதக்கங்களை, முதல்வர் விஜய் போலீசாருக்கு வழங்கினார்.