தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக குவஹாத்தியின் அனில் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் சிக்கித் தவித்தோரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.
05-Aug-2026

ShareTweetShareShare

2/

மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் உள்ள புகழ்பெற்ற பியூகோ எரிமலை, லாவா குழம்புகளையும் வானுயர சாம்பல் புகையையும் கக்கி வருகிறது.
05-Aug-2026

3/

கபினியில் இருந்து கர்நாடக அரசு காவிரியில் திறந்த நீர் இரு தினங்களுக்கு பின் மேட்டூர் அணை நோக்கி சீறிப்பாய்ந்தது. முன்னதாக தமிழக- கர்நாடகா எல்லையிலுள்ள பாலாறு வனப்பகுதி வழியாக பெருக்கெடுத்து வந்த காவிரி நீர்.
05-Aug-2026

4/

வட மாநிலங்களில் பிரபலமானது கன்வர் யாத்திரை சிவ பக்தர்கள் தங்களது சொந்த ஊரில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று புனித நதியில் நீர் எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வதே இந்த யாத்திரை. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் கங்கை நதிக்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் மீது அம்மாநில அரசு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்றது.
05-Aug-2026

இன்றைய போட்டோ04-Aug-2026

5/

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
04-Aug-2026

6/

ஓய்வூதியம், பழைய பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தி ஸ்டேட் டிரான்ஸ்போர்ட், டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்ஸ், ரிட்டுயர்டு எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் போராட்டம் நடத்தினர்.
04-Aug-2026

7/

விழுப்புரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் குடோன் அருகே ரேஷன் அரிசி 30 மூட்டை அளவில் பதுக்கி வைத்திருந்த அரிசி மூட்டையை மாவட்ட இணை பதிவாளர் விஜய சக்தி தலைமையில் பறிமுதல் செய்யப்பட்டது
04-Aug-2026

8/

மாலை பெய்த மழையால் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீர் குளம் போல தேங்கியது அதில் தத்தளித்தபடி சென்ற வாகனங்கள்.
04-Aug-2026

9/

திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது இல்லத்தில் இருந்து கைது செய்து அழைத்து செல்லப்பட்டார். இடம்:நீலாங்கரை.
04-Aug-2026

10/

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கண்டித்து சுந்தராபுரம் சங்கம் வீதியில் த.வெ.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
04-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us