தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது கடந்த 1945, ஆகஸ்ட் 6ல் அமெரிக்கா அணுகுண்டை வீசியது. ஹிரோஷிமா தினத்தையொட்டி மஹாராஷ்டிராவின் மும்பையில் அணு ஆயுத எதிர்ப்பு வாசகங்களை முகம் மற்றும் கைகளில் வரைந்து அமைதி பேரணி சென்ற மாணவ - மாணவியர்.
07-Aug-2026

ShareTweetShareShare

2/

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் அருள்பாலித்தார்.
07-Aug-2026

3/

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
07-Aug-2026

4/

திருநெல்வேலி கால்வாயில் தாமிரபரணி தண்ணீர் திறக்கப்படாததால் நடவுக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இடம்: டவுன் ரயில் நிலையம் அருகே.
07-Aug-2026

5/

ஜோர்கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்து கிருஷ்ணன் குப்பம் பகுதியில் மக்காச்சோளம் மகசூல் ஜோர்.
07-Aug-2026

6/

ஆடி கிருத்திகையையொட்டி கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் வள்ளி,தெய்வானையுடன் முருகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
07-Aug-2026

7/

விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையின் (சென்டர் மீடியன்) செடிகள் அதிகளவில் நடப்பட்டு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இடம். கடலூர்
07-Aug-2026

8/

திருப்பூர் திருப்பதி கோவிலில் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் பெருமாள்.
07-Aug-2026

9/

கூடலூரில் உற்பத்தியாகி கேரளா நோக்கி செல்லும் பாண்டியார் புன்னம்புழா ஆற்றின் நீர்.
07-Aug-2026

10/

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீரால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள பெரியபாணி பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்.
07-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us