தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தேனி மாவட்டம் வருஷநாடு உள்ளிட்ட 98 மலைக்கிராம மக்களை வெளியேற்றுவதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் மதுரை ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கலெக்டர் அலுவலகம் முன் போக்குவரத்து தடை செய்யபட்டு இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
07-Aug-2026

ShareTweetShareShare

2/

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள வயல்களில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
07-Aug-2026

3/

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சாலை உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெரினா நினைவிடம் வரை பேரணி
07-Aug-2026

4/

சென்னை தலைமைச் செயலகத்தின் வெளியே தீடீரென விவசாயிகள் சாக்கு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
07-Aug-2026

5/

தமிழ்நாடு விரைவு ரயிலின் 50வது ஆண்டு விழாவையொட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில் பிரியர்கள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்
07-Aug-2026

6/

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தேனியில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் விழிப்புணர்வு நடந்தது.
07-Aug-2026

7/

ஆடி கிருத்திகை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பழனி ஆண்டவர் சன்னதியில் இருந்து 1008 காவடி எடுத்து மாட வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
07-Aug-2026

8/

உலக தாய்ப்பால் வர விழாவை யொட்டி, திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி மருத்துவமனையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட தாய்மார்கள்,
07-Aug-2026

9/

வரும் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முன் நடந்த ஒத்திகையில், அணிவகுத்து சென்ற போலீசார்.
07-Aug-2026

10/

சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் சங்கம் சார்பில் ஆட்குறைப்பு அரசாணையை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
07-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us