தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

குஜராத்தில் தாஷாமா விரதம் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்கள் குடும்பத்தின் நல்வாழ்வு வளம் மற்றும் பாதுகாப்புக்காக தாஷாமா தேவியை 10 நாட்கள் விரதம் இருந்து வழிபடுகின்றனர். வரும் 12ல் துவங்கவுள்ள விரதத்துக்காக வண்ணமிகு தாஷாமா சிலைகள் தயாராகின்றன.
09-Aug-2026

ShareTweetShareShare

2/

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள நேரு விலங்கியல் பூங்கா நம் நாட்டில் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு தளங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. பூங்காவின் பரந்து விரிந்த இயற்கை சூழல் சிறப்பான பராமரிப்புடன் சேர்ந்து இங்குள்ள சிங்கங்களுக்கான பகுதி சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்துள்ளது.
09-Aug-2026

3/

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள வயல்களில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை பார்வையிட கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் பூக்களை பார்த்து ரசிப்பதுடன் அதற்கிடையே நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
09-Aug-2026

4/

தொடர் கனமழை காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பல படித்துறைகள் நீரில் மூழ்கி வருகின்றன. தசஸ்வமேத் படித்துறையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மக்கள் புனித நீராடினர்.
09-Aug-2026

5/

அணிவகுத்து செல்லும் மேகக்கூட்டங்களை காணவும், கைக்கொள்ள முடியாவிட்டாலும் இயற்கையோடு பாடும் மவுன கீதங்களை காற்றை அனுபவித்து செல்லவும், நினைவுகளை பத்திரப்படுத்தி வைக்கவும் இந்த பயணம் பாடப்புத்தக்கத்தில் அவ்வப்போது எடுத்துப்பார்க்கும் மயிலிறகைபோல் ஆறுதல் தரும். இடம்:படகு இல்லம், ஊட்டி.
09-Aug-2026

இன்றைய போட்டோ08-Aug-2026

6/

நீலகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலா, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
08-Aug-2026

7/

குன்னூரில் நிலவும் இதமான காலநிலையில் மலை பாதையில் இருந்து காணப்படும் சமவெளி பகுதிகள் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
08-Aug-2026

8/

திருவொற்றியூர் சுங்கச்சாவடி- எண்ணூர் விரைவு சாலை சந்திப்பு அருகே பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால் செடி, கொடிகள் படர்ந்தும் மண்ணோடு மண்ணாக புதைந்தும் வீணாகி வருகின்றன.
08-Aug-2026

9/

ஹிமாச்சல பிரதேசத்தின் குலு பகுதியில் தொடர் மழை காரணமாக பியாஸ் நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
08-Aug-2026

10/

சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை பார்க்க வந்த கொருக்குப்பேட்டை கேசிஎஸ் கல்லூரி மாணவியர்.
08-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us