செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஐந்தாம் ஆண்டு காற்றாடி திருவிழா துவங்கியது. நாளை மறுநாள் வரை நடக்கும் இதில் நம் நாட்டு காற்றாடிகள் மட்டுமின்றி வெளிநாட்டு காற்றாடிகள் என 100க்கும் மேற்பட்ட காற்றாடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலில் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் யோகா பயிற்சி மையம் சார்பில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியின் மூவர்ண உடையில் யோகா செய்து அசத்திய மாணவியர்.
சுதந்திர தினத்தையொட்டி மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதிகளில் பலர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர்.