சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலில் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் யோகா பயிற்சி மையம் சார்பில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியின் மூவர்ண உடையில் யோகா செய்து அசத்திய மாணவியர்.
சுதந்திர தினத்தையொட்டி மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதிகளில் பலர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர்.
ஒடிஷா மாநிலத்தில் கனமழை கொட்டுகிறது. ஜாஜ்பூர் மாவட்டம் தசரத்பூரில் பைதரணி ஆற்றின் துணை நதியான கனி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.