தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தை பார்க்க சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இருந்து வந்த ஸ்ரீசுவாமி பப்ளிக் பள்ளி மாணவியர்.
20-Aug-2026

ShareTweetShareShare

2/

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடம்: வேடப்பாளையம், காஞ்சிபுரம்
20-Aug-2026

3/

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் உள்ள டெம்பிள் சிட்டி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய கார் மற்றும் பசு மாட்டை தீயணைப்புப்படை வீரர்கள் போராடி மீட்டனர்.
20-Aug-2026

இன்றைய போட்டோ19-Aug-2026

4/

உபியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பிரயாக்ராஜ் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அப்பகுதியில் வீடின்றி தெருவோரும் வசிக்கும் மக்கள், பிளாஸ்டிக் தாள்கள், தார்பாய்கள் போன்ற தற்காலிகப் பொருட்களைக் கொண்டு மழையில் இருந்து பாதுகாத்துக் கொண்டனர்.
19-Aug-2026

5/

சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை வரும் 28 ல் கொண்டாடப்பட உள்ளது. அன்று பெண்கள், தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கிகயிறு கட்டி அன்பை பகிர்ந்து கொள்வர். இதையொட்டி சென்னை சவுகார்பேட்டையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ராக்கி கயிறுகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட பெண்.
19-Aug-2026

6/

ஓணம் பண்டிகைக்கு கேரளாவுக்கு அனுப்புவதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டு உள்ள நேந்திரம் வாழை அறுவடை பணிகள் தீவரம் அடைந்துள்ளன.
19-Aug-2026

7/

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் சாரல் மழையால், கோவை மேற்கு புறவழி சாலையை அவ்வபோது பனிமூட்டம் சூழும் ரம்மியமான காட்சி.
19-Aug-2026

8/

குன்னூர் ரேலியா அணை வறண்டு சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் வரும் நாட்களில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
19-Aug-2026

9/

ஓணம் பண்டிகையை முன்னிட்டு செண்டுமல்லி பூக்கள் அறுவடையில ஈடுபட்ட பணியாளர்கள். இடம்: தொண்டாமுத்தூர், கோவை.
19-Aug-2026

10/

காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ள காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தென் இந்திய புரோகிதர்கள் சங்கத்தினர், பிக் ஷாவந்தனம் செய்து மரியாதை சமர்ப்பித்தனர்.
19-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us