தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உத்தரகாண்ட் மாநிலம் டெஹரி கர்வால்மாவட்டத்தில் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பிரதான சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
20-Aug-2026

ShareTweetShareShare

2/

விலங்குகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் குஜராத்தின் வன்தாரா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து மூன்று வரிக்குதிரைகள் கேரளாவின் திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவிற்கு வந்தன.
20-Aug-2026

3/

வரலட்சுமி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகாவின் மைசூருவில்பழங்கள், பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக பெருமளவு மக்கள் கூடினர்.
20-Aug-2026

4/

முதல்வர் விஜய் சட்டசபையில் கையை உயர்த்தி செய்த செயல் தொடர்பான புகைப்படத்தை தனது பைலில் முன்பக்கம் வைத்துக் கொண்டு வந்த தவெக எம்எல்ஏ தாஹிரா.
20-Aug-2026

5/

கோவை நவக்கரை ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பு விருந்தினர்கள் முன் நடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் போதைப்பொருளை தவிர்க்க வேண்டுகோள் விடுத்தபடி பூக்கோலமிட்ட மாணவியர்.
20-Aug-2026

6/

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த 31வது தென் மண்டலக் குழுக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சிவக்குமார், கேரள முதல்வர் சதீசன், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணைநிலை கவர்னர் ஜோஷி, புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், தெலுங்கானா துணை முதல்வர் மல்லுபட்டி விக்ரமார்க்கா, லட்சத்தீவுகளின் நிர்வாக அலுவலர் பிரபுல் படேல், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் குழுப் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
20-Aug-2026

7/

சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தை பார்க்க சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இருந்து வந்த ஸ்ரீசுவாமி பப்ளிக் பள்ளி மாணவியர்.
20-Aug-2026

8/

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடம்: வேடப்பாளையம், காஞ்சிபுரம்
20-Aug-2026

9/

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் உள்ள டெம்பிள் சிட்டி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய கார் மற்றும் பசு மாட்டை தீயணைப்புப்படை வீரர்கள் போராடி மீட்டனர்.
20-Aug-2026

இன்றைய போட்டோ19-Aug-2026

10/

உபியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பிரயாக்ராஜ் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அப்பகுதியில் வீடின்றி தெருவோரும் வசிக்கும் மக்கள், பிளாஸ்டிக் தாள்கள், தார்பாய்கள் போன்ற தற்காலிகப் பொருட்களைக் கொண்டு மழையில் இருந்து பாதுகாத்துக் கொண்டனர்.
19-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us