தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்.,14ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மயில் வாகனத்தில் கையில் வேலுடன் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை விழா பந்தலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள்.
23-Aug-2026

ShareTweetShareShare

2/

நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உலக மனித உருவ ரோபோக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில்,1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தின் போது விழுந்த ரோபோ மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறது.
23-Aug-2026

3/

ஊட்டியில் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் கர்நாடக தோட்டக்கலை பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் சுற்றுலா பயணியரை பரவசப்படுத்துகிறது.
23-Aug-2026

4/

தண்டவாளத்தில் கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற தினமும் பல மைல் நடக்க வேண்டிய இவர்களுக்கு சுய பாதுகாப்பும் முக்கியமல்லவா. இடம்: வட கோவை.
23-Aug-2026

5/

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த மந்தன் 4 யுவா -நாக்பூர் 2026 என்ற இளைஞர் மாநாட்டு நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி, இந்தியா மற்றும் ஆசியா சாதனை புத்தகங்களில் இடம்பிடித்தது.
23-Aug-2026

6/

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தோன்ஸ் ஆற்றில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு கவிழ்ந்து கிடக்கும் லாரி.
23-Aug-2026

7/

நாட்டின் விண்வெளி துறையை சேர்ந்த ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது உலக திறமையாளர்களை ஈர்க்கும் வகையில் வலுவான விண்வெளித்துறை சூழலை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இடம்: புதுடில்லி.
23-Aug-2026

8/

கடும் வெயிலுக்கு இடையே, இதமாக பெய்த மழைக்கு வானவில் வானம் மாலையாக தொடுத்த காட்சி. இடம்: சுந்தரராஜபுரம், திண்டுக்கல்.
23-Aug-2026

9/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23-Aug-2026

10/

கடந்த சில நாட்களாக கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பீஹார் மாநிலம் பாட்னா நகரின் ஒரு பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளநீர்.
23-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us