சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே போக்குவரத்து போலீசார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள், விழிப்புணர்வு பேனரில் இனி நாங்கள் போக்குவரத்து விதிகளை மீற மாட்டோம் என கையெழுத்து கையெழுத்து போட்டனர்.
தோட்டக்கலைத்துறையில் புதிதாக கொண்டுவரப்பட்டு உள்ள 2.0 திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் காய்கறி மற்றும்பழங்களை மாலையாக அணிந்து போராடினர்.
உலகிற்கே எரிபொருள் வழங்கும் இடமாக கருதப்படு்ம ஈரானில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெஹ்ரானில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வெளியே இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
உபி மாநிலம் வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் கனமழைக்குப் பின் வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் நோயாளி ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்படுகிறார்.