தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
25-Aug-2026

ShareTweetShareShare

2/

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவியருக்காக விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் தொலைநோக்கிகள் மூலம் சூரியன் மற்றும் விண்வெளியில் உள்ள கோள்களை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
25-Aug-2026

இன்றைய போட்டோ24-Aug-2026

3/

வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சுற்றுலா பயணியர் இதை கண்டுகொள்வதில்லை. அவர்கள் விட்டுச்சென்ற குளிர்பான பாட்டிலை எடுத்து வந்து குடிக்கும் குரங்கு. இடம்: உடுமலை திருமூர்த்திமலை.
24-Aug-2026

4/

தமிழக அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலையை உயர்வு போதாது என்றும், கூடுதல் விலை உயர்வை அறிவிக்கக் கோரியும், கால்நடை விவசாயிகள், ஆவினுக்கு பால் வழங்க மறுத்து, தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில், சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், செல்லியம்பாளையத்தில், சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கால்நடை விவசாயிகள்.
24-Aug-2026

5/

பிரதான ஓணம் நாளை நடைபெறும் நிலையில், பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன. மலையாளிகள் அமைப்பு சார்பில், சென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அய்யப்பன் கோவிலில் பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர்.
24-Aug-2026

6/

டில்லியில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாத மழையிலும், கடமை பாதையில் மழையை வரவேற்று ரசித்த மாணவ - மாணவியர்.
24-Aug-2026

7/

ஓணம் பண்டிகையை வடசென்னை மலையாளிகள் சங்கம் சார்பில் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள ஐயப்பன் கோவிலில்அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர்.
24-Aug-2026

8/

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி வாசித்தார். அருகில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்.
24-Aug-2026

9/

கோவை ரயில்வே ஸ்டேஷனில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோலமிட்டு கொண்டாடினர்.
24-Aug-2026

10/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us