பில்லூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது. மின் உற்பத்திக்காக 6000 கன அடி திறந்தந்தால் பவானி ஆற்றில் சாமண்ணா பம்ப் ஹவுஸ் அருகே உள்ள தடுப்பணையில் தண்ணீர் வரத்தொடங்கியது.
நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தின் சீற்றம் அதிகமாக இருந்ததால், மக்கள் ஆற்றை கடக்கப்பயன்படுத்தப்படும் பாலத்தை தொட்டபடி நீர் ஆர்ப்பரித்துச் சென்றது.
குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட பில்லூர் அணை 100 அடி கொண்டதாகும். இங்கு 2 மின் உற்பத்தி பிரிவு வாயிலாக தலா 50 மெகாவாட் என 100 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. பவானி ஆற்றின் நீர்வரத்து மற்றும் குந்தா மின் வட்டத்தின் பிற மின் நிலையங்களில் இருந்து நீர் வெளியாகும் நீர் ஆகியவற்றை பயன்படுத்தி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நீர் ததும்பி இருப்பதால் மின்உற்பத்திதடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீடுகளில் அன்றாட பயன்பாட்டில் இருந்து வந்த பனை ஓலை பொருட்களுக்கு மீண்டும் தேவை அதிகரித்து வருகிறது. பனை ஓலையில் பல்வேறு பொருட்களை தயாரிக்கும் கைவினைக் கலைஙர். இடம்: மணப்பாடு, தூத்துக்குடி.
சேட்டை: திருவண்ணாமலை அடுத்த மல்லவாடியிலிருந்து வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 கிலோ மீட்டர் துாரம், இருக்கையில் படுத்தபடி, இரு கைகளையும் பின்பக்கம் கட்டியவாறு பைக் ஓட்டிய வாலிபர்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநகராட்சி ட்ரோன் மூலம் அதிநவீன முறையில் வீடு மற்றும் நிலங்களை சர்வே எடுப்பதற்கான பணியை அமைச்சர் ராஜ்குமார் பார்வையிட்டார்.