தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவின் 10 ம் நாளான்று( ஆக.,25) விறகு விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்.
25-Aug-2026

ShareTweetShareShare

2/

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
25-Aug-2026

3/

கோவை ரயில் ஸ்டேஷனில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் பூக்கோலமிட்டு கொண்டாடினர்.
25-Aug-2026

4/

தோட்டக்கலைத்துறையில் புதிதாக கொண்டுவரப்பட்டு உள்ள 2.0 திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் காய்கறி மற்றும்பழங்களை மாலையாக அணிந்து போராடினர்.
25-Aug-2026

5/

வால்பாறையில் பெய்யும் பருவமழையால் சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான பிர்லா நீர்வழிப்பாதையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
25-Aug-2026

6/

தலைமைச் செ யலகத்தில் நடக்கும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தை பார்க்க வந்த சென்னை கிறிஸ்துவ கல்லூரி பள்ளி மாணவர்கள்.
25-Aug-2026

7/

உலகிற்கே எரிபொருள் வழங்கும் இடமாக கருதப்படு்ம ஈரானில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெஹ்ரானில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வெளியே இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
25-Aug-2026

8/

உபி மாநிலம் வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் கனமழைக்குப் பின் வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் நோயாளி ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்படுகிறார்.
25-Aug-2026

9/

தலைமைச் செயலகத்தில் 250 புதிய பஸ்களின் சேவையை தமிழக முதல்வர் விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
25-Aug-2026

10/

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
25-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us