நாள்தோறும் முதல்வர் செல்லும் இசிஆர் சாலையில் மாநகராட்சி சார்பில் தடுப்புகளில் செடிகள் அதிகம் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.இடம் : கொட்டிவாக்கம்
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஆண்டு திருவிழா நாளை மறுநாள்( ஆக.,29) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக சர்ச் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.பராவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பள்ளி மாணவியர் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.
ஆகாயத்தாமரையே ஆக்கிரமித்திருக்கும் குட்டையை தூர்வாரி மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை.காரமடை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குட்டை.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில், ஈஸ்வரமூர்த்தி பூங்கா சுற்று சுவரில், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் பணி நடந்து வருகிறது.
திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், நாற்று நடுவதற்காக போடப்பட்டுள்ள நெல் நாற்றுகள் தண்ணீர் இன்றி கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.இடம்: வெள்ளக்கோவில்,
விருத்தாசலம் அடுத்த காந்தி நகரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து கார் மற்றும் 30 சவரன் நகைகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றதை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சோதனை செய்தனர்.