தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வாகனங்கள் அதிவேகமாக செல்லும் முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் அதிநவீன வேகக் கண்காணிப்பு கருவி பயன்படுத்தி அபராதம் விதித்த வருகின்றனர். இடம்: மேட்டுப்பாளையம் ரோடு ஐ.டி.ஐ.,
27-Aug-2026

ShareTweetShareShare

2/

ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தை தரிசனம் செய்து கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
27-Aug-2026

3/

ஆகாயத்தாமரையே ஆக்கிரமித்திருக்கும் குட்டையை தூர்வாரி மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை.காரமடை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குட்டை.
27-Aug-2026

4/

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில், ஈஸ்வரமூர்த்தி பூங்கா சுற்று சுவரில், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் பணி நடந்து வருகிறது.
27-Aug-2026

5/

ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் வடலூர் நகராட்சியில் பொது சுகாதாரபிரிவு அலுவலகத்தில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடியது
27-Aug-2026

6/

திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், நாற்று நடுவதற்காக போடப்பட்டுள்ள நெல் நாற்றுகள் தண்ணீர் இன்றி கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.இடம்: வெள்ளக்கோவில்,
27-Aug-2026

7/

விருத்தாசலம் அடுத்த காந்தி நகரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து கார் மற்றும் 30 சவரன் நகைகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றதை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சோதனை செய்தனர்.
27-Aug-2026

8/

ஓணம் பண்டிகையையொட்டி பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் பகுதியில் நடந்த காளைபூட்டு வீர விளையாட்டில் காளைகளுடன் மிரட்டி வந்த வீரர்கள்.
27-Aug-2026

9/

திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை பூண்டி நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் வீ த லீடர் அமைப்பு சார்பில் மனு கொடுத்தனர்.
27-Aug-2026

10/

தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரை காண வந்த மக்கள்.
27-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us