சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனும் பள்ளி கல்வித்துறை இயக்கக வளாக கழிப்பறை பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதால் கல்வி சார்ந்த கோரிக்கைகளுக்காக வருவோர் சிரமப்படுவதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கழிப்பறை வளாகம் சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உள்ளது.
உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வாரணாசியில் ஓடும் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 234 அடியை தொட்டால் அபாயம் என்ற நிலையில் 84 படித்துறைகளையும் மூழ்கடித்து 228 அடிக்கு மேல் பெருக்கெடுத்து ஓடியது.