தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பசுமை சோலை: ரோட்டின் இருபுறமும் பந்தல் போல் படர்ந்து காணப்படும் புளிய மரங்கள் காண்போரை ரசிக்க வைக்கிறது. இடம்: உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை.
01-Sep-2026

ShareTweetShareShare

2/

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கோவை - திருச்சி ரோடு குளக்கரை அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள்.
01-Sep-2026

3/

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் வெயிலான காலநிலை நிலவினாலும் அவ்வப்போது பெய்யும் சாரல் மழை தேயிலை தோட்டங்களை பசுமையாக்குகிறது.
01-Sep-2026

4/

மொபைல்போன்களை பாதுகாப்பு அறையில் வைக்க குவிந்த பக்தர்கள். இடம்: வட பழனி முருகன் கோவில், சென்னை.
01-Sep-2026

5/

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசன நீரை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்.
01-Sep-2026

6/

முதல்வர் விஜய்யை வரவேற்க மேட்டூர் அணை முன் குவிந்துள்ள மக்கள்.
01-Sep-2026

7/

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உருக்குலைந்து கிடக்கும் குடியிருப்புகளுக்கு மத்தியில் எஞ்சிய பொருட்களை சேகரிக்கும் குடியிருப்புவாசிகள்.
01-Sep-2026

8/

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனும் பள்ளி கல்வித்துறை இயக்கக வளாக கழிப்பறை பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதால் கல்வி சார்ந்த கோரிக்கைகளுக்காக வருவோர் சிரமப்படுவதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கழிப்பறை வளாகம் சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உள்ளது.
01-Sep-2026

9/

உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வாரணாசியில் ஓடும் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 234 அடியை தொட்டால் அபாயம் என்ற நிலையில் 84 படித்துறைகளையும் மூழ்கடித்து 228 அடிக்கு மேல் பெருக்கெடுத்து ஓடியது.
01-Sep-2026

10/

சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரை காண வரிசையில் காத்திருந்த ஈரோடு வேளாளர் அறிவியல் கலை கல்லூரி மாணவியர்.
01-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us