தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சங்க காலத்தில் மலை வெள்ளமும், மழை வெள்ளமும் பாய்ந்தோடிய வைகை, கால வெள்ளத்தில் கரைந்தோடி களையிழந்து போனாலும், மங்கையவள் ஆளும் மதுரையம்பதியோ மாற்றத்தை ஏற்று கான்கிரீட் காளான்களால் நிறைந்து நம்மனமகிழ பருந்துப் பார்வையில் விருந்து படைக்கிறது.
04-Sep-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ05-Sep-2026

2/

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இடம்பெற்றுள்ள மலர் செடிகள்.
05-Sep-2026

3/

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
05-Sep-2026

4/

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு மாணவிகள் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
05-Sep-2026

5/

கும்பாபிஷேகம் நெருங்குவதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதியின் வெளிப்பிரகார கலையலங்காரம் வண்ணமயமாக ஜொலித்து கண்களை விரிய வைக்கிறது.
04-Sep-2026

6/

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பெருக்கெடுத்து ஓடும் வருணா நதிக்கரையில் அமைந்துள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வீடுகளுக்குள் சிக்கிய மக்கள் படகு வாயிலாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.
04-Sep-2026

7/

இஸ்கான் எனப்படும் சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் சென்னை மாமல்லபுரம் சாலையில் அக்கரை என்ற இடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோவிலின் சிறப்புஅலங்காரத்தில் அருள் பாலித் கிருஷ்ணர் ராதை.
04-Sep-2026

8/

ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்க உள்ள நிலையில், இங்கு நிலவும் இதமான காலநிலையை ரசிக்க இப்போதே சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டி- கூடலூர் சாலை, தலைகுந்தா பகுதியில் உள்ள பைன்சோலையை ரசிக்கும் சுற்றுலா பயணியர்.
04-Sep-2026

9/

தினமலர் நாளிதழ், பீ ரைட் நிறுவனம் மற்றும் அன்னப்பூர்ணா மசாலாஸ் சார்பில் நடந்த பிரசாதம் கோகுலாஷ்டமி விழாவில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து சொக்க வைத்த குழந்தைகள். இடம்: ராம்நகர், கோதண்டராமர் கோவில்.
04-Sep-2026

10/

திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சங்கு பால் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
04-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us