தொடர் கனமழையால் கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் பீஹாரின் பாட்னாவில் ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள வீட்டை வெள்ள நீர் பகுதியளவு மூழ்கடித்தது. இதனால் அங்கு வசிக்கும் குடும்பத்தினர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
குன்னூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை வேளையில் செக்க சிவந்த வானம் நகரை நிறம் மாற்றிய காட்சி, மக்களை வியப்படைய செய்தது.
திருப்பூர், குண்டடம், சின்னாரிபாளையம் பகுதியில் டாஸ்மாக கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாதர் தேசிய சமமேளத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வானூர் அடுத்த ஆன்பாக்கம் கிராமத்தில் சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன், சுப்பிரமணியர், எல்லை காளியம்மன்,எல்லை அய்யனாரப்பன்,வீரனார், கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.