12 அம்ச நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி வடகோவை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில், கணபதி தரிசனம் என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன.
தூத்துக்குடியில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரில்லா வேடமணிந்த நபர் வாயிலாக லேசான அடி கொடுத்து, தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் ஆபத்தை விளக்கினர்.
கோவை வால்பாறை அடுத்துள்ள அட்டகட்டி காட்சி முனையில் இருந்து மேல் ஆழியாறு அணையின் எழில்மிகு தோற்றம், பள்ளத்தாக்கு போன்றவை சுற்றுலா பயணியர் மனதை கவர்ந்துள்ளது.