தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சி ஆர்.சி.,நடுநிலை பள்ளியில்மாணவ,மாணவிகளுக்கு தினமலர் பட்டம் இதழ் வழங்கப்பட்டுள்ளது.
11-Sep-2026

ShareTweetShareShare

2/

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை ஒட்டி நேற்று திருநெல்வேலியில் அவர் பயின்ற ம.தி.தா., இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் அவரை நினைவுகூரும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்..
11-Sep-2026

3/

கோவை விக்டோரியா ஹாலில் நடந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் மண் அள்ளும் வாகனத்திற்கான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் பலரும் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
11-Sep-2026

4/

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் உற்பத்தியாகும் தக்காளிக்கு விலை கிடைக்காததாலும் முழு வளர்ச்சியடைவதற்கு முன்பாகவே நோய்வாய் படுவதாலும் விவசாயிகள் ரோட்டோரம் கொட்டி சென்றுள்ளனர்..
11-Sep-2026

5/

மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் செடி கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளது.
11-Sep-2026

6/

தாம்பரம்_வேளச்சேரிமேஜர் முகுந்த் வரதராஜன் சாலையிலிருந்து  சேலையூர் கேம்ப் ரோடு இணைக்கும் மேம்பல பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
11-Sep-2026

7/

வறண்டு வரும் குளங்களுக்கிடையே காய்ந்து நிற்கும் மரங்களில் பசுமையை நோக்கிய எதிர்பார்ப்புடன் இந்த பறவைகள். இடம்: கோவை கோளராம்பதி குளம்.
11-Sep-2026

8/

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை ராஜேந்திரா ரோட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.
11-Sep-2026

9/

தினமலர் நாளிதழ் சார்பில் நடத்தப்படும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2026 சென்னை கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானத்தில் தொடங்கியது. குழந்தைகளை கவரும் விதமாக இடம்பெற்றுள்ள ஆர்.சி., கார் ரேஸ்.
11-Sep-2026

10/

வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடிய புதுச்சேரி யூகோ வங்கி தலைமை அலுவலகம்.
11-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us