மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இரு நாட்கள் நடக்கும் விமான கண்காட்சியின் முதல் நாளில் நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வேஸ்ட் டு வொண்டர் ப்ளவர் கார்டன் என்ற சூழலியல் பூங்காவிற்கு வருகை தந்த பள்ளி மாணவர் ஒருவர் பூந்தொட்டியாக மாற்றப்பட்டுள்ள பழங்கால காரின் அழகை ரசித்தார்.
கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் காக்கிளியர் இம்ப்ளான்ட் எனும் உள் காது கேட்கும் கருவி திட்டத்தின் 25 ஆண்டு விழா நேற்று சென்னையில் நடந்தது நிகழ்ச்சியில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. ரவி ராமலிங்கம் விருதுகளை வழங்கினார் உடன் இடமிருந்து விருது பெற்ற திலகவதி, நிறுவனர் பேராசிரியர் ராமலிங்கம், அட்வான்ஸ் பயனிக்ஸ் தலைமை மருத்துவர் வினோத் நாடிக், விருது பெற்ற அம்சபிரியா, முகமது இலியாஸ்.இடம்.ஹோட்டல் ரேடிசன்ப்ளூ எழும்பூர்.