தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் 20வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழாவின் போது இந்திய அணியின் அணிவகுப்பை பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்று சாதித்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகரும், கபடி வீரர் பவன் ஷெராவத்தும் முன்னின்று நடத்தி சென்றனர்.
20-Sep-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ21-Sep-2026

2/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆவணி மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
21-Sep-2026

3/

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்கள், தங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை அங்குள்ள ஜீலம் ஆற்றில் கரைத்தனர்.
21-Sep-2026

4/

பச்சைக் கம்பளம் விரித்தது போல்...சில்லென்று காற்று மலைகளை தழுவி செல்ல, வானில் கார்மேகங்கள் சூழ, மலையை எதிர்பார்த்து காத்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இடம்: குன்னூர் சோகத்தொரை.
20-Sep-2026

5/

பஞ்சாப், உபி மாநிலங்களில் இருந்து ரயிலில் வந்த கோதுமை மூட்டைகள், வட கோவை ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டன.
20-Sep-2026

6/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால், அஞ்செட்டி தொட்டல்லா ஆற்றில் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம்.
20-Sep-2026

7/

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சுதர்சன் லேஅவுட்டில் நேற்று பெய்த கனமழையால், காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து, தனியார் ஐ.டி., நிறுவன ஊழியரின் கார் சேதமானது
20-Sep-2026

8/

குஜராத் மாநில தேர்வு வாரியத்தால் பள்ளிகளில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வு இன்று( செப்.,20) நடந்தது. அங்குள்ள ராஜ்கோட் பகுதியில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தேர்வர்கள்.
20-Sep-2026

9/

விடுமுறை நாளான இன்று( செப்.,20) ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
20-Sep-2026

10/

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில்(10 மீ ஏர்ரைபிள்) ஒரே நாளில் தமிழகத்தின் இளவேனில் வாளறிவன், இரண்டு வெள்ளி வென்றார். தனி நபர் பிரிவில் கைப்பற்றிய வெள்ளிப் பதக்கத்துடன் இளவேனில். இடம்: நயோகா, ஜப்பான்.
20-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us