படம் கிஷன்செய்தி ஜெயபிரகாஷ் சென்னை செனாய் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டை சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்திறந்து வைத்தார். உடன் இடமிருந்து- அமைச்சர்கள் வெங்கட்ரமணன், ராஜ்மோகன், கனிமொழி எம்.எல்.ஏ, லுலு ஹைப்பர் மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் அலி, அண்ணாநகர் எம்.எல்.ஏ ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் .
வறண்ட நிலத்தில் வருணன் கருணையால் வான்மழை பொழிந்தது. புதைந்த விதையில் இருந்து தரை பிளந்து தலைதுாக்கும் பசும்புல் கண்டு, தலைகுனிந்து மேய்ந்தன நாட்டு மாடுகள். இடம்: வாடிப்பட்டி அருகே கட்டக்குளம்.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட மரகதம் குமரவேல்,முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் இடம்:தலைமைச் செயலகம்,சென்னை.
எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று நோய்கள் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இடம் :கலைவாணர் அரங்கம், சென்னை.
எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார். இடம் :கலைவாணர் அரங்கம், சென்னை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நகரில் நடைபெற்ற அதிக எடை கொண்ட பூசணிக்காய்க்கான எடைக் போட்டியில் , பிராண்டன் டாசின் பூசணிக்காய்(எடை 1,084 கிலோ) வெற்றி தேர்வு பெற்றது அதனை அவர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.