பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான குத்துச்சண்டை போட்டிகள் கோவை க.க.சாவடி ஸ்ரீ நாராயணகுரு கலை, அறிவியல் கல்லூரியில் துவங்கியது. இதில் மாணவர்கள் பிரிவில் மோதிய வீரர்கள்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., சட்டசபையில் பதவி ஏற்றுக்கொண்டார் சாய்ராம் ரியல் எஸ்டேட் குரூப்ஸ் உரிமையாளர்கள் கோபிநாதன், பழனி முருகன், ஜி.வி. ரியல் ஏஜென்சி உரிமையாளர் தேவேந்திரன் (எ)தேவா ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து கொடுத்தனர்.