சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கியில் கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு எஸ்.பி. அபிஷேக் குப்தா துப்பாக்கி குறித்து விளக்கம் அளித்தார்.
நாட்டின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 31ல் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கர்நாடகாவின் ஷிவமொக்காவில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பங்கேற்ற மாணவியர் போதைக்கு எதிரான பதாகைகளை ஏந்தி சென்றனர்.
ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. பிளேஸ் டி லா ரிபப்ளிக் சதுக்கத்தில் தீ வைக்கப்பட்ட கட்டடம்.
ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை இணைக்கும் போக்குவரத்து வழித்தடமான சோஜிலா கணவாய் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது. பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிஷன் சக்தி 6.0 இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்ற பெண் போலீசார். இடம்: காஜியாபாத், உபி.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள பிரபல துர்கா பூஜை பந்தலில் திடீரென ஏற்பட்ட அதிகப்படியான மக்கள் நெரிசல் மற்றும் மழை காரணமாக வெளியேறும் பலர் இறந்துள்ளனர்.பந்தலுக்கு வெளியே சிதிறிக்கிடக்கும் காலணிகள்