அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நேற்று நடந்தது இதில் பங்கேற்ற திமுக எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டோர்.இடம் : தேனாம்பேட்டை
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையில் இருந்து நேற்று வினாடிக்கு, 2,450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அணை முன்புள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி, தென்பெண்ணையாற்றில் செல்லும் தண்ணீர்.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தொழிலிற்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்த தொழிலாளர்கள். இடம்: கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 2.