விழுப்புரம் ரயில் நிலையம் - திருச்சி நெடுஞ்சாலை தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி வரை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் ஊர்வலம் ஆர்எஸ்எஸ் தென்பாரத தலைவர் வன்னியராஜன் தலைமையில் நடைபெற்றது.
டில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் ஆந்திரா அஸோஸியேஷன் இணைந்து நடத்திய நாட்டிய நிகழ்ச்சியில், ‘கோதையின் கனவு’ என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த கவிதா திருமலை பரதநாட்டியம் ஆடினார். உடன், அவரது குரு மேரி இளங்கோவன். சபா நிர்வாகி ஸ்வப்னா சேஷாத்திரி, கவுரவ செயலர் கிருஷ்ணசுவாமி, ஆந்திர அஸோஸியேஷன் பொதுச் செயலர் மண்சிராஜு லஹரி.