வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரட்கர் தலைமையிலான அலுவலர்கள், நேற்று, ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அம்மணி அம்மன் கோபுர நுழைவாயில் பகுதியில் தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்யும் பணியில் கோவில்கள்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பதாகை உடன் பேரணி சென்ற கல்லூரி மாணவிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பாவூர் ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வலியுறுத்தி, மாங்கால் கூட்ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் ஈடுபட்ட கிராம மக்கள்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவான 36 அடியை எட்டியது.இதில் தடையை மீறி ஆபத்தை உணராமல் குளிக்கும் இளைஞர்கள்.
வளிமண்டல ஆய்வுக் கருவியை ஹீலியம் பலூன் வாயிலாக விண்ணில் ஏவும் நிகழ்ச்சி துடியலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது இதனை வியப்புடனும் ஆர்வத்துடன் கண்ட பள்ளி மாணவர்கள்.